மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.!

நிலக்கரித் திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜிக்கும், அவர் மனைவி ருஜிராவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலக்கரிக் கொள்ளையர்களிடம் இருந்து அபிசேக்கும் ருஜிராவும் முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிசேக்கும் ருஜிராவும் தாக்கல் செய்த மனுக்களைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இருவரும் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.