சென்னையில் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் வடிகால் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கனமழை பெய்ததால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், மழைநீர் வடிகால்களைச் சீரமைக்கவும், ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுறுத்தினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.