மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 2,000 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மனவளர்ச்சி குன்றியவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட நாட்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 254 பேர் பயன் அடைவார்கள் என்றும், இதற்காக 31 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.