இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது.
இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதம் அதிகரிப்பினை செய்துள்ள நிலையிலும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..!
எனினும் உக்ரைன் ரஷ்ய பிரச்சனைகளும் முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. ஆக இதில் ஏதேனும் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தால் அது சந்தையில் எதிரொலிக்கலாம்.
சர்வதேச சந்தைகள்
அமெரிக்காவின் மத்திய வங்கியானது எதிர்பார்த்தை போலவே வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் நல்ல ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த பிப்ரவரி 11ல் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், கடந்த அமர்வில் முதலீடுகள் சற்று அதிகரித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதுவும் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை சற்று அதிகரித்துள்ள நிலையிலும் அதிரித்துள்ளது. இது சந்தைகு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மார்ச் 16 நிலவரப் படி, அன்னிய முதலீட்டாளர்கள் 311.99 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 772.55 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 498.34 புள்ளிகள் அதிகரித்து, 57,314.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து, 17,128.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 819.79 புள்ளிகள் அதிகரித்து, 57,636.44 புள்ளிகளாகவும், நிஃப்டி 227.90 புள்ளிகள் அதிகரித்து, 17,203.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1676 பங்குகள் ஏற்றத்திலும், 331 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குறியீடு 2% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதே நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர்ஸ் டியூரபிள், ஹெல்த்கேர், பிஎஸ்இ கன்சியூமர்ஸ் டியூரபிள், மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, டாடா கன்சியூமர் டியூரபிள், கோடக் மகேந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 09.56 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 839.08 புள்ளிகள் அதிகரித்து, 57,671.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 247.55 புள்ளிகள் அதிகரித்து, 17,222.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex, nifty trade higher even as US fed hikes rate
opening bell: sensex, nifty trade higher even as US fed hikes rate/முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.. மீண்டும் 800 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்..!