ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி., படிக்க வேண்டுமென்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடிதிருக்க வேண்டும். இனிமேல் முதுநிலை படிக்காமல் பிஎச்.டி., படிக்கும் வகையில் புதிய திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த இருக்கிறது.
மூன்று ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால பி.ஜி. படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமென்றாலும், படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.
4 ஆண்டு கால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும் படிக்கலாம். தொலைதூரக் கல்வி வழியிலும் 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்… இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மக்கள் சக்தியால் வென்றது- பிரதமர் மோடி பெருமிதம்