முருங்கப்பாக்கத்தில் ரதி–மன்மதன் வீதியுலா| Dinamalar

புதுச்சேரி-முருங்கப்பாக்கத்தில் ரதி – மன்மதன் வீதியுலா நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் காமன் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த 9ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு ரதி–மன்மதன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, தினமும் ரதி-மன்மதனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுவந்தது.நேற்று, ரதி -மன்மதன் வீதியுலா நடந்தது. அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் எம்.பி., ராமதாஸ், அறங்காவல் குழுவினர்,பஞ்சாயத்தார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று 17ம் தேதி மாலை 5.௦௦ மணிக்கு காமன் தகனம் நிகழ்ச்சி், 21ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு காமனை எழுப்புதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.