கொல்கத்தா,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஜார்கண்ட்- நாகாலாந்து அணிகள் இடையிலான கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 880 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
பின்னர் ஆடிய நாகாலாந்து முதல் இன்னிங்சில் 289 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து 591 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஜார்கண்ட் அணி நேற்றைய கடைசி நாளில் 6 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்திருந்த போது டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
ஜார்கண்ட் மொத்தம் 1008 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச முன்னிலை இது தான்.
மேலும், முதல் இன்னிங்சில் முன்னிலை கண்டதன் அடிப்படையில் ஜார்கண்ட் அணி கால்இறுதிக்கும் தகுதி பெற்றது.