ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு.. வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்..!

பங்கு சந்தை முதலீட்டாளர்களில் முக்கிய முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தொடர்ந்து பல்வேறு பங்குகளில் முதலீடு செய்பவர். அவர் ஒரு பங்கினை வாங்கினாலோ அல்லது விற்றாலோ கூட அது சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அந்தளவுக்கு முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்க கூடிய பங்குகளாக உள்ளன.

அந்த வகையில் தற்போது நிபுணர்கள் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் உள்ள பங்கினை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

என்ன பங்கு அது? ஏன் இதனை வாங்க வேண்டும். அதன் இலக்கு விலை எவ்வளவு? கவனிக்க வேண்டிய வேறு விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்தை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா, புதின் திட்டம் என்ன?! இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா..?!

மீடியம் டெர்ம் இலக்கு

மீடியம் டெர்ம் இலக்கு

ஹாபிட்டாலிட்டி பங்குகள் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறும் நிலையில், டெல்டா கார்ப் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த பங்கின் விலையானது மீடியம் டெர்மில் 310 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம். நீண்டகால நோக்கில் புதிய உச்சத்தினையும் தொடலாம் எனவும் எஸ்.எம்.சி குளோபல் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்?

நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்?

டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இதன் சார்ட் பேட்டர்னும் சாதகமாகவே உள்ளது. தற்போதைய விலையில் ஒருவர் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அதம் உடனடி இலக்கக 310 ரூபாயினை வைத்துக் கொள்ளலாம். எனினும் ஸ்டாப் லாஸ் 266 ரூபாயினை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் வாங்கணும்
 

ஏன் வாங்கணும்

சமீபத்திய சரிவுக்கு மத்தியில் இந்த பங்கானது முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. இது ஹாஸ்பிட்டாலிட்டி துறையை சேர்ந்த பங்காதலால், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சற்றே வீழ்ச்சி கண்டு இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இதன் வருவாய் விகிதமானது வரும் காலாண்டுகளில் அதிகரிக்கலாம். ஆக இந்த துறை சார்ந்த பங்கினை வைப்பது லாபகரமானதாக இருக்கலாம்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்

பங்கு சந்தை முதலீட்டாளர்களில் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் டெல்டா கார்ப் நிறுவனத்தின் 1.15 கோடி பங்குகள் அல்லது 4.31% பங்குகளும் இருக்கலாம். இதே அவரின் மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலாவின் வசமும் 85 லட்சம் பங்குகள் அல்லது 3.18% பங்குகளும் உள்ளது. ஆக மொத்தம் சேர்த்து 7.49% அல்லது 2 கோடி பங்குகள் ராகேஷ் குடும்பத்தினரிடம் உள்ளது.

NSE - இன்றைய நிலவரம் என்ன?

NSE – இன்றைய நிலவரம் என்ன?

டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது, என்.எஸ்.இ-யில் தற்போது கிட்டதட்ட 1% அதிகரித்து, 286 ரூபயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 288 ரூபாயாகும், இதன் குறைந்தபட்ச விலை 283 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 308.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 142.20 ரூஉபாயாகும்.

BSE - இன்றைய நிலவரம் என்ன?

BSE – இன்றைய நிலவரம் என்ன?

இதே பி.எஸ்.இ-யில் தற்போது 1% அதிகரித்து, 285.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 287.90 ரூபாயாகும், இதன் குறைந்தபட்ச விலை 283 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 308.55 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 142 ரூபாயாகும்.

Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh jhunjhunwala portfolio: analysts suggest buy this hospitality stock

Rakesh jhunjhunwala portfolio: analysts suggest buy this hospitality stock/ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு.. வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்..!

Story first published: Thursday, March 17, 2022, 15:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.