ராஜிவ் காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு சிறை விடுப்பு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனின் சிறை விடுப்பை ஐந்தாவது முறையாக நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு கோரி அவரது தாயார் முதல்வருக்கு மனு அளித்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த பரிசீலிக்கும்படி தெரிவித்த நிலையில், சிறை விடுப்பு வழங்கப்பட்டு, கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்துக்குச் சென்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு!
இந்நிலையில், தாயார் ராஜேஸ்வரியை உடனிருந்து கவனித்துக் கொள்ள 30 நாட்கள் கூடுதலாக சிறை விடுப்பு கோரிய அவரது குடும்பத்தினர் மனுவை ஏற்று, கடந்த 4 மாதங்களாக விடுப்பு நீட்டிக்கப்பட்டு வந்தது. அது முடிவடைய இருந்த நிலையில், ஐந்தாவது முறையாக ரவிச்சந்திரனின் சிறை விடுப்பு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் ரவிச்சந்திரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.