மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த அரசு செலுத்திய வைப்புத்தொகை வட்டியுடன் திருப்பி தரப்பட்டுள்ளது.
வேதா நிலைய இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற உத்தரவிட்ட கடந்த அதிமுக அரசு, வைப்புத்தொகையாக ரூ.67,90,52,33 செலுத்தியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபாவும் தீபக்கும் தொடர்ந்த வழக்கில், வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்தியது செல்லாதென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட முடிவெடுத்துள்ளதாக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வைப்புத்தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், வட்டியுடன் சேர்த்து ரூ.70,40,87,713 தென்சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டது.
சமீபத்திய செய்தி: ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: இடம் பிடித்த இந்தியர்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM