விஜய் சேதுபதியின் மாமனிதன் மே மாதம் திரைக்கு வருகிறது
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் மாமனிதன். இப்படத்தில் அவருடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடிக்க இளையராஜா – யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி மூன்று ஆண்டுகள்ஆகிவிட்ட நிலையில் தற்போது மாமனிதன் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் .கே .சுரேஷ் வருகிற மே மாதம் வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இவர் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி இணைந்த தர்மதுரை படத்தை தயாரித்தவர்.
இதுகுறித்து ஆர்கே.சுரேஷ் கூறுகையில், ‛‛நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை. அதன் பின்பு இப்படி ஒரு படமா? என்று மனிதனைப் பார்த்து வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் விஜய் சேதுபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம் என்றார்.