வில்லியனுாரில் இன்று பவுர்ணமி நடைபயணம் | Dinamalar

வில்லியனுார்-வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு, ஆன்மிக நடைபயணம் இன்று துவங்குகிறது.வில்லியனுாரில் பிரசித்திபெற்ற திருக்காமீஸ்வரர் கோவில்உள்ளது.சுற்றுப்புற பகுதிகளில்,ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையை போல, வில்லியனுாரில் பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கி, மாட வீதிகள் வழியாக ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பகுதியில் உள்ள பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம் சென்றடைவர்.அங்கிருந்து, வி.தட்டாஞ்சாவடி, மணவெளி, வழியாக காசி விஸ்வநாதர் கோவில், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைவர்.இதன்படி, சுமார் 11 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலை 6:00 மணியளவில், திருக்காமீஸ்வரர் கோவிலில்நடை பயணம் துவங்குகிறது.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று இந்த வழிதடத்தில் ஆன்மிக நடை பயணம் நடைபெற உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.