ஹோலிகா தகன நிகழ்ச்சி: வட மாநிலங்களில் உற்சாக கொண்டாட்டம்

புராண கதைகளில் ஒன்றான பிரகலாதன் கதையுடன் தொடர்புடையுது ஹோலிகா தகனம் நிகழ்ச்சி. அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன். தன் சகோதரனின் இறப்புக்கு காரணமான மகாவிஷ்ணு மீது மகன் பிரகலாதன் பக்தி கொண்டிருப்பது, இரண்யகசிபுவுக்கு கோபத்தை அதிகப்படுத்தியது.
இதனையடுத்துதன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு சகோதரி ஹோலிகாவை இரண்யகசிவு பயன்படுத்தினான். ஹோலிகாவிடம், தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான்.
சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக் கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது. அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. 
ஒரு கட்டத்தில் தீயில் ஹோலிகாவே எரிந்து சாம்பலாகிப்போனாள். ஆயினும் பிரகலாதனுக்கு ஒன்றும் நேரவில்லை. ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப் படுகிறது. அதற்கு முந்தைய நாள் ஹோலிகா தகனமாக வட மாநில மக்கள் கடைப்பிடிக்கின்றனர்.
நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று ஹோலிகா தகனம் நிகழ்ச்சி டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு வட மாநிலங்களில் நடைபெற்றது.  
மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்பட்டது. இதனை பஞ்சாப்பின் அமிர்தசரஸ், டெல்லியின் கோல் மார்க்கெட் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மக்கள் கொண்டாடினர்.
உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.  அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் சாக்லெட்டுகளை அவர் வழங்கினார். 
இதேபோல் ஜெய்பூரில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற ஹோலிகா தகனம் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பங்கேற்றார்.  போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் கலந்து கொண்டார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும் கோலிகா தகம் நிகழ்சசியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.