இந்தியாவில் 12-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நாளில் 2.60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஸ்டர் டோஸூம் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்படி, 12- 14 வயதுக்குட்பட்ட 2,60,136 குழந்தைகளுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்ட 52,621 பேருக்கு பூஸ்டர் டோஸூம் வழங்கப்பட்டதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு 28 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கவடே 15-18 வயதுக்குட்பட்டவர்களில், 5,60,97,128 பேருக்கு முதல் டோஸையும், 3,50,27,747 பேர் கோவாக்சின் இரண்டாவது டோஸையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. பெண் பித்தனாக சுற்றிய நீராவி முருகன்- 20 ஆண்டு சொகுசு வாழ்க்கை பற்றி பரபரப்பு தகவல்கள்