2024ல் நடக்கும் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் : காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியறுத்தல்!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல கூட்ட மாதிரியை உள்ளடக்கிய தலைமைதான் ஒரே வழி என்று அந்த கட்சியின் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்கள். 5 மாநில தேர்தல் படுதோல்வி மற்றும் அதனை தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில் மீண்டும் சோனியா காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவை கபில் சிபல் போன்றோரை கலகக்குரல் எழுப்பச் செய்தனர். கபில் சிபல் வீட்டில் நேற்று ஜி 23 எனப்படும் அதிருப்தி தலைவர்களின் கூட்டம் நடப்பதாக இருந்தது. பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் வீட்டில் கூட்டம் நடைபெற்றது. இதில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணீஷ் திவாரி, சசிதரூர், ஆனந்த் ஷர்மா, மணிசங்கர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.கூட்ட மாதிரியை உள்ளடக்கிய எல்லா மட்டங்களிலும் முடிவும் எடுக்கும் தலைமைதான் தேவை என்று இந்த தலைவர்கள் மீண்டும் குரல் எழுப்பியுள்ளனர்.2024ல் நடக்கும் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நம்பகமுள்ள மாற்று சக்தியாக உருவாக ஒரே கருத்துள்ள கட்சிகளிடம் பேசி புதுப்பாதையை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்த தீர்மானத்துடன் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் இன்று சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.