காதல் கணவரான தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்
ஐஸ்வர்யா
. இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை மாற்றவில்லை.
மேலும் மார்ச் 11ம் தேதி மாறன் படம் குறித்து
தனுஷ்
போட்ட ட்வீட்டை லைக் செய்தார். அதே சமயம்
பயணி
காதல் பாடல் வீடியோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று கிரெடிட் போட்டார். இதனால் தனுஷுடன் மீண்டும் சேர்வாரா, இல்லையா என்று ரசிகர்கள் குழம்பினார்கள்.
இந்நிலையில் பயணி வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கு பதில் கிடைத்துவிட்டது.
ஹீரோயினின் பெற்றோர் அவர் கண் முன்பே சண்டை போடுகிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி ஜோடியாக செல்ஃபி எடுத்து மகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
அப்பா, அம்மா என்று இருந்தால் சண்டை போடத் தான் செய்வார்கள். ஆனால் அந்த கோபம் ரொம்ப நாளைக்கு நிலைத்து நிற்காது, சேர்ந்துவிடுவார்கள் என்கிற மெசேஜ் கொடுத்திருக்கிறார் அண்ணி. இதன் மூலம் தனுஷ் அண்ணனுடன் விரைவில் சேர்ந்துவிடுவார் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது.
கணவன், மனைவி பிரியலாம். ஆனால் அப்பா, அம்மா பிரியக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
உங்க புது காதல் அருமை, க்யூட்: ஐஸ்வர்யாவுக்கு குவியும் வாழ்த்து