உலகின் மிகப் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது. 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு மாநாடு நடைபெறும் இடத்தையும், தேதியையும் கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை ட்விட் செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், “இந்த ஆண்டின் டெவலெப்பர்கள் மாநாடு Google I/O, ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் (Shoreline Amphitheatre) இருந்து மே 11, 12 ஆகிய தேதிகளில் நேரலை செய்யப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.
Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாட்டில் கூகுள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் தங்களது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களை நுகர்வோருக்கு தெரிவிக்கும். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்படும். இது தொடர்பாக ஒரு பதிர் விளையாட்டும் கூகுள் i/o பக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, யூடியூப் தளத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்கள், கூகுள் Hangouts நிறைவு, கூகுள் Chats உதயம், ஆண்ட்ராய்டு 13 குறித்த அறிவிப்புகள், வருங்கால பிக்சல் ஸ்மார்ட்போன்கள் போன்றவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகும் யூடியூப் அம்சங்கள்
கூகுள் நிறுவனம் யூடியூப் பார்வையாளஎர்களுக்காக புதிய அம்சத்தை நிறுவியுள்ளது. இதன் மூலம் நீங்கள் காணும் வீடியோக்களில் டிரான்ஸ்கிரிப்ஷன் காண்பிக்கப்படும். இணையத்தில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இந்த அம்சம், தற்போது செயலி பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.
என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!
இந்த அம்சத்தினை பயன்படுத்தி, நீண்ட நேர வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து நாம் காண முடியும். தேவையில்லாமல் முழு வீடியோவை பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டி இருக்காது.
மேலும் படிக்க:
YouTube வழங்கும் புதிய அம்சம்; ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!
கூகுள் CLIP அம்சம்
Share Clips எனும் புதிய வசதியைப் பயனர்களுக்காக யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி சோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, 60 நொடிகளுக்கு வீடியோ கிளிப்பிங்குகளை பயனர்கள் நறுக்க முடியும்.
இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு காணொலியைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் இருக்கும் ஒரு குறுகிய பகுதி மட்டும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதை மட்டும், உங்கள் நண்பர்களுடன் பகிர, மூன்றாம் தரப்பு தளத்தை நாட நேரிடும். இந்த குறையை ஷேர் கிளிப்ஸ் அம்சம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
YouTube அறிமுகப்படுத்தும் புதிய Share Clips வசதி – எப்படி பயன்படுத்துவது!