ICJ on Russia War: போரை நிறுத்து ரஷ்யா! சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

கீவ்: உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதி மன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது, 

இந்த தீர்ப்பை தங்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி என்று கூறும் உக்ரைன் அதிபர் Zelenskyy, தீர்ப்பை உடனடியாக ரஷ்யா அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ICJ இன் உத்தரவு சர்வதேச சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் உக்ரைன் அதிபர், தீர்ப்புக்கு ரஷ்யா கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். இந்த உத்தரவை புறக்கணிப்பது ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: அமைதி உடன்படிக்கையை எதிர்நோக்கும் உக்ரைன்

உக்ரைன் மற்றும் உலகிற்கே ஆறுதல் அளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் உயர் நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம், உக்ரைன் படையெடுப்பை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது. 

“13-2 வாக்குகள் மூலம், ரஷ்ய கூட்டமைப்பு பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்” என்று சர்வதேச நீதிமன்றாம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கிய பின்னர் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் உக்ரைன் முழுமையான வெற்றியைப் பெற்றதாகக் கூறும் உக்ரைன் அதிபர், “இந்த உத்தரவு சர்வதேச சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இதற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். இந்த உத்தரவை புறக்கணிப்பது ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.

 

இதற்கிடையில், Kyiv Independent வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், உக்ரைனும் ரஷ்யாவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்காலிக சமாதானத் திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடுத்த வழக்கின் விசாரணையின் போது, ​​இரு தரப்பினரும் சர்ச்சையை மோசமாக்கும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஐசிஜே ஒருமனதாக உத்தரவிட்டது.  

மேலும் படிக்க | உக்ரைன்! அகதிகளாக வெளியேறும் பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படும் அபாயம்

வழக்கில் இறுதி முடிவு நிலுவையில் உள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தற்காலிக நடவடிக்கைகளை பரிசீலிப்பதன் அவசியம் மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டியது முக்கியமானது என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“உக்ரைன் பிரதேசத்தில் நடைபெறுவஹாக கூறப்படும் இனப்படுகொலையைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் நோக்கத்திற்காக ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவ நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று கோர உக்ரைனுக்கு உரிமை உள்ளது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

ரஷ்யாவிற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இடைக்கால நடவடிக்கைகளைக் குறிக்க உக்ரைனின் கோரிக்கையின் பேரில் ICJ இந்த உத்தரவை பிறப்பித்தது. 

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.