Tamil Nadu News Updates: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றச்சாட்டி உக்ரைன் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி
உக்ரைனுக்கு கூடுதலாக 800 டாலர் தளவாட உதவி – ஜோ பைடன்
உக்ரைன் அமெரிக்காவிடம் உதவிகேட்ட சில மணி நேரங்களில் கூடுதலாக 800 மில்லியன் டாலர் அளவுக்கு போர் தளவாட உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே இதைச் செய்கிற ஒரே கட்சி பா.ம.க: டாக்டர் ராமதாஸ் பெருமிதம்
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 133வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.
உத்தேச அமைதி ஒப்பந்தம் தயார்
ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்த அமைதி ஒப்பந்தம் தயார் என தகவல் தெரிவிக்கின்றன. அமைதி உடன்பாடு ஒப்பந்தம் மூலம் உக்ரைனில் பதட்டம் தணியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி . 4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக Ph.Dல் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்தியாவில் மேலும் 2,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு 30,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகளவில் இதுவரை 46.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 39.60 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 60.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு கால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கி உத்தரவு
கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்டையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.