விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் கூட முடிவதற்குள், படம் ரூ 100 கோடியை எட்ட உள்ளது.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. 7வது நாளான நேற்று படம் 19 கோடி ரூபாய் வசூலித்தது. அப்படிப்பார்க்கும் போது மொத்தம் 98.25 கோடியை படம் வசூலித்தது. இன்று படம் 100கோடியை எட்டும் என தெரிகிறது.
1990 ஆம் ஆண்டு காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.விவேக் அக்னிஹோத்ரி படத்தின் இரண்டாம் வார வசூல் இந்த வாரம் படம் வசூலித்ததை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM