அமெரிக்காவிடம் சிக்கிய சீனா.. ரஷ்ய போலவே சீனா மீது தடையா..?! சீனாவின் முடிவு என்ன..?!

ரஷ்யா – உக்ரைன் மீதான போரின் காரணமாக உலக நாடுகள் கிட்டத்தட்ட இரண்டாகப் பிரிந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் அதன் நடப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து இருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில சோவியத் நாடுகள் நிற்கிறது.

இந்நிலையில் இந்தியாவைப் போல் சீனா உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் எவ்விதமான தடையும் விதிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் 4 நாட்கள் முன்பு ரஷ்யா சீனாவிடம் ராணுவ உதவியை நாடியது.

இதனால் அமெரிக்கா கடுமையான கோபத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேச உள்ளார்.

உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி துறைக்கு சாதகம் தான்.. எப்படி.. ஏன்..!

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் போனில் பேச உள்ள நிலையில், இந்த ஆலோசனையில் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தால் சீனா அதற்கான விலையைக் கொடுக்கும் என்று கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யா – அமெரிக்கா மத்தியில் மட்டும் அல்லாமல் சீனா உடனும் மோதல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் ஈஸ்டர்ன் நேரப்படி (1300 GMT) காலை 9 மணிக்குத் தொலைப்பேசியில் பேசுவதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ரஷ்யாவிற்குச் சீனா ஆதரவு தெரிவித்தால் ரஷ்யாவை போல் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்க அரசு ஏற்கனவே கீழ்மட்ட சீன அரசாங்க அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் மற்றும் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளது.

3ஆம் உலகப் போர்
 

3ஆம் உலகப் போர்

இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக மட்டும் அல்லாமல் 3ஆம் உலகப் போர் உருவாக்கும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக உலக நாடுகள் பயப்படுகிறது. ஏற்கனவே சீனா – அமெரிக்கா மத்தியில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் நவம்பர் மாத்திற்குப் பின்பு ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் முதல் முறையாகப் பேசுகின்றனர்.

போன் கால்

போன் கால்

இந்தப் போன் கால் மூலம், சீனா ரஷ்யாவுக்கு உக்ரைன் மீதான போரில் ஆதரவு தெரிவித்தால் கட்டாயம் கடுமையான தடைகளை எதிர்கொண்ட வேண்டியிருக்கும் என்பதைச் சீனாவுக்கு உணர்த்த அமெரிக்க முயற்சி செய்கிறது. இதேவேளையில் சீனா ரஷ்யாவுக்கு ராணுவ உதவிகளைச் செய்துள்ளது. இதை இரு தரப்பும் உறுதி செய்யவே தற்போது இந்தப் போன் கால்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Joe Biden and Xi Jinping speak by phone over Putin’s war in Ukraine on military support

Joe Biden and Xi Jinping speak by phone over Putin’s war in Ukraine on military support அமெரிக்காவிடம் சிக்கிய சீனா.. ரஷ்ய போலவே சீனா மீது தடையா..?! சீனாவின் முடிவு என்ன..?!

Story first published: Friday, March 18, 2022, 16:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.