ஆடையை விலக்கி சோதனை: லண்டனில் பாடசாலை சிறுமிக்கு ஆதரவாக திரண்ட மக்கள்


லண்டனில் கருப்பின சிறுமி ஒருவர் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில், மாநகர பொலிசார் மீது அவர் வழக்குத் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி தமது பள்ளி மீதும் சிவில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவு செய்துள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்கொட்லாந்து யார்டு மன்னிப்பு கேட்டுள்ளது.

இனவாதம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் எனவும் ஸ்கொட்லாந்து யார்டு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இவ்வாறான ஒரு செயல் இனிமேலும் எவருக்கும் நடந்திராத வகையில் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த 15 வயது சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பவத்தின் போது குறித்த பள்ளி மாணவி போதைப்பொருள் கொண்டு சென்றதாக தவறாக சந்தேகிக்கப்பட்டு நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்வுக் கூடத்தில் இருந்து பள்ளியின் மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரு மகளிர் மாநகர பொலிசாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையே, Hackney Cop Watch ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.