இது என் நாடு… இங்கதான் இருப்பேன்: 'நோ வார்' பேனர் காட்டிய ரஷ்ய பெண்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வ முடிவுகளும் எடுக்கப்படவில்லை. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.

அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று ஐ.நா., சபை தொடங்கி உலக நாடுகள் வரை வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷியாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும்
மரினா ஓவ்சியனிகோவா
என்ற பெண், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது, ‘போரை நிறுத்துங்கள்’ என்ற வாசகத்துடன் உள்ளே நுழைந்தார். ‘
போர் வேண்டாம்
. போரை நிறுத்துங்கள். பிரசாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள்’ என்ற வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் அந்த பதாகையில் இடம் பெற்றிருந்தன.

உலக அழகி போட்டியில் அசத்திய அமெரிக்க வாழ் இந்திய பெண்!

இதையடுத்து, ரஷ்யாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, கைது செய்யப்பட்ட அப்பெண்ணுக்கு சுமார் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அப்பெண்ணுக்கு அந்நாட்டு மதிப்பில் 30,000 ருபெல்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தி விட்டு அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். அவருக்கு உதவ பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்வந்தார். ஆனால், அதனை அப்பெண் மறுத்து விட்டார். இதையடுத்து, பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மரினா ஓவ்சியனிகோவா, “இந்த போர் அணு ஆயுத போராக மாறாமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது இந்த செயலால் என் மகன் வருத்தமடைந்துள்ளான். ஆனால் நான் ஏன் இதை செய்தேன் என்பதை என் மகன் வளர்ந்தபின் புரிந்துகொள்வான் என்று நம்புகிறேன்.” என்றார்.

அதேபோல், ஜெர்மனியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நான் எனது நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. நான் தேசபக்தி உடையவள்.நான் எந்த வகையிலும் என் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.