ஐஸ்வர்யா
முசாஃபிர் என்ற காதல் ஆல்பத்தை கடந்த மூன்று மாதங்களாக இயக்கி வந்தார். தமிழில்
பயணி
, தெலுங்கில் சஞ்சரி மலையாளத்தில் யாத்ரகாரகன் என உருவாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
தமிழ் வெர்ஷனான பயணியை நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மலையாள வெர்ஷனை நடிகர் மோகன் லாலும் தெலுங்கு வெர்ஷனான சஞ்சரியை நடிகர்கள் மகேஷ் பாபுவும் அல்லு அர்ஜூனும் வெளியிட்டனர்.
நேற்று மாலை 4.44 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ஆல்பம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓபன் ஆகாமல் போனது. இதையடுத்து கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த ஆல்பத்தை வெளியிடப்பட்டது. வெளியான சற்று நேரத்திலேயே ஐஸ்வர்யாவின் ஆல்பத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிய தொடங்கிவிட்டன.
இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போச்சு…. தனுஷ் – ஐஸ்வர்யா டிவிட்டால் காண்டான ரசிகர்கள்!
தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா தன்னிச்சையாக இந்த ஆல்பத்தை இயக்கினார். இதனால் புதிய ஆல்பம் எப்படி இருக்கும் என பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஐஸ்வர்யாவின் ஆல்பம் இல்லை என கூறி வருகின்றனர்.
அத்தனை அப்டேட்டுகளை கொத்து ஹைப்பை கிரியேட் செய்த ஐஸ்வர்யா இன்னும் கூட மெனக்கெட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனுஷை பிரிந்த பிறகான ஐஸ்வர்யாவின் புதிய காதல் என இந்த ஆல்பத்தை பார்த்த ரசிகர்கள் இதுவும் இப்படி புஸ்ஸாகி போய்விட்டதே என பரிதாபப்பட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!