ஓடிடி தளங்களின் நாயகனாகப் பார்க்கப்படும் ‘
நெட்பிளிக்ஸ்
‘ பயனர்களின் வசதிக்காக பல வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. அமெரிக்க நிறுவனம் என்றாலும், பெருவாரியான பயனர்களை இந்தியாவிலும் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் சந்தா கட்டண சலுகைகளை பார்வையாளர்களுக்கு
நெட்ஃபிக்ஸ்
வழங்கியது.
இந்த சலுகை கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து, அதிகபடியான இந்திய ஓடிடி பார்வையாளர்கள் நெட்பிளிக்ஸ் வசம் கணக்கைத் தொடங்கினர். இந்தியாவில் கட்டணம் குறைக்கப்பட்டாலும், உலக நாடுகளில் சந்தா கட்டணத்தை சிறிது சிறிதாக நிறுவனம் உயர்த்தி வருகிறது.
ஓடிடி தளங்கள் தங்களின் சொந்த தயாரிப்பு பணிகளை முடிக்கி விட்டுள்ளன. சொந்த படைப்புகளை பார்வையாளர்களுக்கு அளிப்பதில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு போட்டியாக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ போன்றவை உள்ளன.
என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!
நெட்பிளிக்ஸ் புதிய திட்டம்
எனவே, ஒரிஜினல் தொடர்களை எடுப்பதற்கு அதிக செலவினம் ஏற்படுவதால், நெட்பிளிக்ஸ் Sub-Accounts என்ற முறையை செயல்படுத்த உள்ளது. இதனால், வருவாய் அதிகரிக்கும் என்று நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
அதன்படி, தற்போது ஒரு கணக்கை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிரும்போது, அதற்கு சந்தா கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். சில நாடுகளில் இந்த இணை கணக்குகள் முறையை நெட்பிளிக்ஸ் செயல்படுத்தி சோதனை செய்து வருகிறது.
இதற்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட நெட்பிளிக்ஸ் பயன்பாட்டுக்கு 2 டாலர் முதல் 3 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையை விரைவில் அனைத்து நாடுகளுக்கும் ஓடிடி நிறுவனம் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பமுடியாத விலையில் Redmi போன் அறிமுகம் – வெறும் ரூ.9999-க்கு Snapdragon ஸ்மார்ட்போன்!
கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில், உலகளவில் 22 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில், வீட்டில் இருப்பவர்கள் பொழுதை களிக்க நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் பக்கம் திரும்பியதால், இந்த துறை அபார வளர்ச்சியைக் கண்டன.
நெட்பிளிக்ஸ் இந்தியா சந்தா
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் அதிகரித்து வரும் சூழலில், நெட்பிளிக்ஸ் புதிய அம்சங்களை செயல்படுத்தி சந்தாதாரர்களை தக்க வைத்துக் கொள்ள முனைப்புக் காட்டி வருகிறது.
மொபைல் திட்டம் (மொபைல்): ரூ.199-இல் இருந்து ரூ.149ஆக குறைக்கப்பட்டுள்ளதுபேசிக் திட்டம் (மொபைல் / மடிக்கணினி): ரூ.499-இல் இருந்து ரூ.199ஆக குறைக்கப்பட்டுள்ளதுஸ்டாண்டேர்டு திட்டம் (மொபைல் / மடிக்கணினி / டிவி) (எச்டி- 1080) (இரண்டு பேர் அணுகல்): ரூ.649-இல் இருந்து ரூ.499ஆக குறைக்கப்பட்டுள்ளதுபிரீமியம் திட்டம் (மொபைல் / மடிக்கணினி / டிவி) (4K – அல்ட்ரா எச்டி தரம்) (நான்கு பேர் அணுகல்): ரூ.799-இல் இருந்து ரூ.649ஆக குறைக்கப்பட்டுள்ளது
Read more:
Airtel வாடிக்கையாளர்கள் விரும்பும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்!Jio ரீசார்ஜ்: அளவில்லா 3ஜிபி டேட்டா திட்டங்கள்… அள்ளித்தரும் ஜியோ!Google I/O நிகழ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட சுந்தர் பிச்சை!