ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது, வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது.
தற்போது வரையில் இவ்விரு நாடுகளுக்கான பிரச்சனையானது மிக மோசமாக நிலவி வரும் நிலையில், இதுவரையில் சுமூக நிலை ஏற்பட்டதாக தெரியவில்லை.
இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை விதித்துள்ளன..
எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..!
ரஷ்யா மீதான தடை
குறிப்பாக ரஷ்யாவின் மிகப் பிரபலமான வணிகமான எண்ணெய் வணிகத்திலேயே கைவைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது மிகப்பெரிய ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு பிரச்சனை
இதற்கிடையில் அதிகளவில் கச்சா எண்ணெய்-யினை இறக்குமதியினை செய்து வரும் இந்தியா, பெரியளவில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரஷ்யா இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய ரஷ்யா அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் பேச்சு வார்த்தைக்கு தயார்
தற்போது ஈரானும் இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதியினை கொடுக்க தயாராக உள்ளதாகவும், இதற்காக இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க தயாராக உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பானது வந்துள்ளது.
ரூபாய் – ரியால் வர்த்தக முறை
ரூபாய் – ரியால் வர்த்தக முறையால் இந்தியா பலன் அடைந்து வந்த நிலையில், அமெரிக்காவின் தடையால் இது பிரச்சனையை எதிர்கொண்டது. இது செலவுகளை குறைக்கவும் உதவும் என்று MVIRDC உலக வர்த்தக அமைப்பின் அலி செகேனி மேற்கோள் காட்டினார்.
வணிகத்தில் இருந்து விலகல்
ஈரான் இந்தியாவுக்கு இரண்டாவது பெரிய எண்ணெய் சப்ளையராக இருந்து வந்தது. ஆனால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ஈரான் மீது விதித்தது. மேலும் பொருளாதார தடைகளையும் விதித்தது. இதற்கிடையில் ஈரான் மீது வணிகம் செய்பவர்களுக்கும் தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவும் ஈரானுடன் வணிகத்தில் ஈடுபட இயலாத நிலை இருந்தது.
Iran ready to meet India’s Energy needs: Tehran ambassador
Iran ready to meet India’s Energy needs: Tehran ambassador/ஈரானின் சூப்பர் ஆஃபர்.. இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா?