உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் 4-வது வாரத்துக்குள் சென்றுள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.
ஆனால் பெரிய நகரங்கள் எதையும் இதுவரை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. குறிப்பாக தலைநகர் கிவ்வையும், 2-வது பெரிய நகரமான கார்கிவையும் பிடிப்பதில் ரஷிய ராணுவம் திணறி வருகிறது.
கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ள போதிலும் நகருக்குள் இன்னும் நுழையவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை கூறும் போது, ‘‘ரஷிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷியாவின் படையெடுப்பு உக்ரைன் நகரங்களில் சமீப நாட்களில் ஸ்தம்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இதையும் படியுங்கள்… தமிழக சட்டசபை கூடியது- சற்று நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்