உக்ரைன்- ரஷியா போர் இன்று 23-வது நாளாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்த பிறகே, நவீனின் உடல் இந்தியா கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே கர்நாடகா முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீனின் உடல் வரும் திங்கட்கிழமை (மார்ச் 21-ம் தேதி) அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. ரஷியாவில் முக்கிய பொறுப்பில் இருந்து முன்னாள் துணை பிரதமர் விலகல்