உக்ரைனில் மேலும் 50 இந்தியர்கள் உள்ளதாகவும் அவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான வழிகள் ஆராயப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலம் பெயர்ந்த ஏராளமானோர் புகாரெஸ்ட்டில் ரயிலைப் பிடிக்க தண்டவாளங்களில் நடந்து செல்கின்றனர். இந்தியர்கள் இதுவரை 22 ஆயிரத்து 500 பேருக்கு மேல் மீட்கப்பட்டதாகவும் 18 நாடுகளைச் சேர்ந்த மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது