உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்து வரும் ரஷ்யா அடுத்து நேட்டோ நாடுகளின் எல்லையில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த வாரம் உக்ரைனின் மேற்கு எல்லையைத் தாண்டி கிரோஷியா அருகே 350 மைல் பறந்து வட்டமிட்ட டிரோன் ஒன்று எல்லையருகில் விழுந்து நொறுங்கியது. கிரோஷியா நேட்டோவின் உறுப்பு நாடாகும்.
அந்த டிரோனில் ஒரு வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக கிரோஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அது உக்ரைனுக்கு சொந்தமான டிரோனா ரஷ்யாவுக்கு சொந்தமானதா என்பது தெளிவாகவில்லை. இதே போல் இன்னொரு டிரோன் ருமேனியாவுக்குள் நுழைந்துள்ளது.
இதனிடையே போலந்து வழியாக புகுந்த இன்னொரு ரஷ்ய டிரோனை சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்த மூன்று சம்பவங்களும் உக்ரைன் போர் நேட்டோ நாடுகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ பரவக்கூடிய நிலையை உணர்த்துகின்றன.
இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் நேட்டோ கூட்டமைப்பு தொடர்பு கொள்ள முயன்று வந்த போதும் முடியவில்லை.