ஊழியர்கள் மனம் குளிரவைத்த IDFC பர்ஸ்ட் வங்கி சிஇஓ..!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ வி வைத்தியநாதன், இறந்த சக ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவருக்குச் சொந்தமான வங்கி பங்கு இருப்பில் இருந்து சுமார் 5 லட்சம் பங்குகளைப் பரிசாக அளித்துள்ளார்.

வைத்தியநாதன் ஏற்கனவே தனது பங்குகளைத் தனது பயிற்சியாளர், வீட்டு உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வீடுகளை வாங்க உதவுவதற்காகப் பரிசளித்த நிலையில், தற்போது மறைந்த தனது ஊழியர்களின் குடும்பத்திற்காக அளித்துள்ளார்.

Paytm பேமெண்ட்ஸ் பேங்க்: புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்த ஆர்பிஐ..!

 வைத்தியநாதன்

வைத்தியநாதன்

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி வைத்தியநாதன், தன்னுடன் நீண்ட காலமாக நெருங்கி பழகிய, இறந்த சக ஊழியரின் சில குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் வகையில், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மற்றும் அவர்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் வகையிலும் வைத்தியநாதன் வைத்திருந்த IDFC FIRST வங்கி பங்குகளில் 5,00,000 ஈக்விட்டி பங்குகளைப் பரிசாக அளித்துள்ளார், என்று ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை

சென்னையில் பிறந்தார் வைத்தியநாதன் தனது பள்ளி படிப்பை இந்தியாவில் உள்ள பல கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயின்றார். இதைத் தொடர்ந்து வி. வைத்தியநாதன் தனது கல்லூரி படிப்பை மேஸ்ராவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் தனது மேம்பட்ட மேலாண்மை படிப்பை முடித்தார்.

 சிட்டிபேங்க், ஐசிஐசிஐ
 

சிட்டிபேங்க், ஐசிஐசிஐ

படிப்பை முடித்த வைத்தியநாதன் சிட்டி வங்கியில் தனது முதல் பணியைத் துவங்கினார். 1990 முதல் 2000 வரை சிட்டி வங்கியின் நுகர்வோர் வங்கியில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓவாக இருந்தார், மேலும் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

 கேப்பிடல் ஃபர்ஸ்ட்

கேப்பிடல் ஃபர்ஸ்ட்

பல நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் பணியாற்றிய வி. வைத்தியநாதன் 2012ல் சொந்தமாக நிறுவனத்தை உருவாகும் முயற்சியில் இறங்கி ஒரு NBFC அமைப்பில் பங்கு வாங்கி, இதன் பின் வாப்பெர்க் பின்கஸ் நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் கேப்பிடல் ஃபர்ஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்

2018ல் ஐடிஎஃப்சி வங்கி மற்றும் கேப்பிடல் ஃபர்ஸ்ட் இணைப்பு அறிவிக்கப்பட்ட பின்பு ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டின் எம்டி மற்றும் சிஇஓ பதவியைப் பிடித்தார் வைத்தியநாதன். இவருடைய வளர்ச்சி வங்கி துறையில் பணியாற்றி வரும் பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IDFC First Bank MD & CEO Vaidyanathan gifts 5 lakh shares to family of deceased colleague

IDFC First Bank MD & CEO Vaidyanathan gifts 5 lakh shares to family of deceased colleague ஊழியர்கள் மனம் குளிரவைத்த IDFC பர்ஸ்ட் வங்கி சிஇஓ..!

Story first published: Friday, March 18, 2022, 9:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.