தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகின்றார்
சமந்தா
. சமீபத்தில் வெளியான
பேமிலி மேன்
வெப் தொடரின் மூலம் ஹிந்தி திரையுலகிலும் பிரபலமானார். அதன் காரணமாக அவருக்கு பல பாலிவுட் படவாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமந்தா தற்போது தன் பள்ளி பருவ காலம் பற்றி பேசியுள்ளார். அவர் பள்ளி பயிலும்போது நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம். அவர் முதன்முதலில் திரையில் பார்த்ததே
சூர்யா
படம் தானம். 11 ஆவது படிக்கும்போது திரையில் சூர்யாவின்
காக்க காக்க
படம் பார்த்தாராம்.
விஜய் நடிகராவதில் எனக்கு இஷ்டமில்லை..அதனால் தான் அப்படி செய்தேன் : எஸ்.ஏ.சந்திரசேகர்
அன்றிலிருந்து சூர்யாவின் தீவிர ரசிகையானார் சமந்தா. வேல், வாரணம் ஆயிரம் படங்கள் வெளியாகும்போது கல்லூரியில் படித்துவந்தார் சமந்தா. ஒருநாள் அவர் படிக்கும் கல்லூரிக்கு சூர்யா சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
அப்போது சமந்தாவும் அவர்களது நண்பர்களும் சூர்யா சூர்யா என கூச்சலிட்டு ஆரவாரம் செய்தார்களாம். அந்த அளவிற்கு சூர்யாவின் ரசிகையாக இருந்துள்ளார் சமந்தா. அதன் பின் நடிப்பில் ஆர்வம் கொண்ட சமந்தா
விண்ணை தாண்டி வருவாயா
படத்தின் மூலம் நடிகையானார்.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா சூர்யாவுடனும் அஞ்சான், 24 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கல்லூரி படிக்கும் காலத்தில் சூர்யாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துவிடவேண்டும் என்பதுதான் சமந்தாவின் அதிகபட்ச ஆசையாம்.
ஆனால் பின்னாளில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்போம் என்று கனவில் கூட அவர் நினைத்து பார்த்ததில்லை என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!