பிரபல யூட்யூப் விமர்சகர்
ப்ளு சட்டை மாறன்
. ஆண்டி இந்தியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். எந்த படம் வெளியானாலும் தனது யூட்யூப் தளத்தில் ராவாக விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் ப்ளு சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஆரி, ஆர்கே சுரேஷ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பலரும் ப்ளு சட்டை மாறனின் தரம் தாழ்ந்த விமர்சனத்தை கண்டித்து வருகின்றனர்.
வலிமை படத்தையும் அஜித்தையும் கடுமையாக விமர்சித்ததால் அஜித் ரசிகர்களுக்கும ப்ளு சட்டை மாறனுக்கும் படம் வெளியானது முதலே டிவிட்டர் பக்கத்தில் பயங்கர மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பிவிஆர் தியேட்டரில் ப்ளு சட்டை மாறன் தாக்கப்பட்டதாக சில போட்டோக்களுடன் தகவல் வெளியானது.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் ப்ளுசட்டை மாறனை நக்கலாகவும் நல்ல படியாகவும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் ப்ளு சட்டை மாறன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், PVR ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான?
இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ… வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி.. என பதிவிட்டுள்ளார்.
ஆனால் அவரது பதிவை ஏற்காத ரசிகர்கள், அப்புறம் ஏன் முகம் வீங்கியிருக்கிறது என்றும் மரண பயம் முகத்தில் தெரிகிறதே என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தாக்கவில்லை என்ற உங்களின் இந்த உருட்டு நூதனமான உருட்டாக இருக்கிறது என்றும் பங்கம் செய்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!