ஹாலிவுட்டின் எம்ஜிஎம் ஸ்டூடியோவை 64 ஆயிரத்து 722 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க அமேசான் நிறுவனம் பேச்சு நடத்தி வந்தது. இந்நிலையில் அமேசான் இன்று வெளியிட்டுள்ள பதிவில், எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை 64 ஆயிரத்து 722 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எம்ஜிஎம்மின் ஊழியர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும், யாரையும் பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.