கேரள மாநிலம் மலப்புரம் அருகே, பழுதான காரை மெக்கானிக் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது காரில் பற்றிய தீ, மெக்கானிக்கின் தலையிலும் பற்றிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வளாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு மெக்கானிஷ் ஷெட்டில் பணியாற்றி வரும் ஊழியர், ஷெட்டுக்கு வந்த காரை பழுதுபார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது காரின் இன்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றிய நிலையில், காரின் முன்னே குணிந்து நின்றபடி பழுதுப் பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக்கின் தலையிலும் தீ பற்றிக்கொண்டது.
பதற்றமான சூழ்நிலையிலும், சுதாரித்துக் கொண்ட அந்த மெக்கானிக், கைகளாலேயே தலையில் பற்றிய நெருப்பை அணைத்து உயிர் தப்பினார். இதையடுத்து, காரில் ஏற்பட்ட தீயை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அணைத்துள்ளனர்.