பீதர்: பீதர் மாவட்டத்தில் உள்ள பால்கி தாலுகாவில் இரு சகோதரிகளின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. பீதர் மாவட்டம் பால்கி தாலுகாவின் அதர்கா கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் ராவ், இவருக்கு அங்கிதா (15), ஷ்ரத்தா (10) என இரு மகள்கள் இருந்தனர். இவர்களின் உடல் ஊரில் உள்ள கிணற்றில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். பெற்ேறார்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சிறுமிகள் உயிரிழந்திருப்பது கொலையை அல்லது தற்கொலையா என உறுதி செய்யப்படவில்லை. விசாரணைக்கு பின்னர் இதற்கான தீர்வு கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர். இறந்த சிறுமிகளின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திப்பதாக எம்எல்ஏ ஈஸ்வர்கண்டே தெரிவித்தார்.