கொரோனா வைரசு தொற்று குறைகிறதா?

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.75 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18இலட்சத்து 94 ஆயிரத்து327 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46கோடியே 56இலட்சத்து 17ஆயிரத்து 159 -ஆகஅதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 11இலட்சத்து 77 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 39 கோடியே 75இலட்சத்து 93 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 61,936,522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5,919 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 60 இலட்சத்து 88 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.