டோக்கியோ:ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்; 97 பேர் காயமடைந்து உள்ளனர்.
கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கில் அமைந்துள்ள புகுஷிமா மாகாணத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.சுனாமி எச்சரிக்கைரிக்டர் அளவுகோலில், 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், புகுஷிமாவில் கட்டடங்கள் குலுங்கின. டோக்கியோவிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக, சிறிய அளவிலான சுனாமி அலைகள், கரையோர நகரங்களை தாக்கின. எனினும், நேற்று காலை சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.மின் இணைப்பு துண்டிப்புபுகுஷிமாவில், வீடு, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 97 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபரங்களை, பார்லிமென்ட்டில் பிரதமர் புமியோ கிஷிடா வெளியிட்டார். நில நடுக்கத்தால், 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு நேற்று முன்தினம் இரவு துண்டிக்கப்பட்டது.எனினும், நேற்று காலை பெரும்பாலான பகுதிகளில் தடைபட்ட மின்சார வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
Advertisement