"ஜெர்சி எண் 7 " ரகசியத்தை உடைத்த டோனி…!!

சூரத்,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்காக  சென்னை அணி வீரர்கள் கேப்டன் டோனி தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த டோனி தான் ஏன் 7-வது எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் ” 7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக தான் அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தேன். எனவே, 7வது மாதம் 7வது நாள், அதுதான் காரணம். 
எந்த எண் நல்ல எண் என்று பார்ப்பதற்குப் பதிலாக, எனது பிறந்த தேதியை எண்ணாகப் பயன்படுத்த நினைத்தேன். அதே நேரத்தில் பலர் எண் 7-யை அதிஷ்ட எண்ணாக கருதுவதில்லை. 
நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் எண் 7 என் இதயத்திற்கு நெருக்கமான  எண் ” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.