தங்கம் விலையில் தொடரும் சரிவு.. ஆனா நகை கடையில் எந்த மாற்றமும் இல்லை.. மக்கள் கவலை..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில், இன்று மீண்டும் சற்று சரிவினைக் கண்டுள்ளது.

கடந்த அமர்வில் அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்ததாக செய்திகல் வெளியானாலும் தங்கம் விலையானது சற்றே ஏற்றத்திலேடே காணப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் சர்வதேச சந்தையில் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

இதே இந்திய கமாடிட்டி சந்தையானது இன்று ஹோலியை முன்னிட்டு விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வு உண்டு. ஆக சர்வதேச சந்தையின் எதிரொலியானது இன்று மாலை நேர வர்த்தகத்தில் இருக்கலாம். அப்போதும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

இந்தியாவில் தங்கம் உற்பத்தியினை அதிகரிக்க WGC-ன் சூப்பர் அட்வைஸ்.. இருந்தா நல்லா தான் இருக்கும்..!

தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை

தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை

தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. தொடர்ந்து அவ்விரு நாடுகளுக்கும் இடையேய்யான பேச்சு வார்த்தையும் தோல்விலேயே இருந்து வருகின்றது. இதன் காரணமாக இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த பிரச்சனையானது நீடிக்குமோ என்ர அச்சம் எழுந்துள்ளது. இது இவ்விரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினை மட்டும் அல்ல, சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

ஆக என்னதான் தங்கம் விலையானது தற்போது சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து, போர் நிறுத்தப்பட்டு அது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பங்கு சந்தைகள் ஏற்றம்
 

பங்கு சந்தைகள் ஏற்றம்

எப்படியிருப்பினும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவடைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக இதுபோன்ற பல காரணிகளும் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில், தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

பேங்க் ஆப் இங்கிலாந்து

பேங்க் ஆப் இங்கிலாந்து

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக உக்ரைன் பதற்றத்தின் மத்தியிலும் பேங்க் ஆப் இங்கிலாந்து மத்திய வங்கியானது வரும் கூட்டத்தில், கட்டாயம் வட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் முதல் கட்டன்மாக 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் WTI எண்ணெய் விலையானது 105.88 டாலர்களாக இருந்த நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 109.29 டாலர்களாகவும் உள்ளது. இதற்கிடையில் இது மேற்கொண்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 7.85 டாலர்கள் குறைந்து, 1935.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.84% குறைந்து, 25.385 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 4822 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 38,576 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5260 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 42,080 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 72.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 729 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 72900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், டாலர் மதிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு என பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்று சற்று சரிவில் காணப்படுகின்ரது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே நீண்டகால நோக்கிலும் பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 18th 2022: gold prices softer amid stronger dollar

gold price on march 18th 2022: gold prices softer amid stronger dollar/ தங்கம் விலையில் தொடரும் சரிவு.. ஆனால் ஜுவல்லரி விலையில் எதிரொலிக்கவில்லையே..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.