தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 70 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்று ஒரே நாளில் 127 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் 730 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்..
பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லை- பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து