பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சமீபத்தில் இலட்சத்தீவு சென்று வந்தேன். விமானநிலையம் உள்ள அகத்தி தீவின் நான்கு மாநிலங்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கி கொண்டாட வருமாறு இலட்சத்தீவின் பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தார்கள்.
அங்கே சென்றால் ஆச்சரியம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கையில் இனிப்போடு வரவேற்றார்கள்.
100% இஸ்லாமியர்கள் வாழும் இலட்சத்தீவில் விருப்பத்தோடு வெற்றிவிழாவை கொண்டாடியவர்கள் குறிப்பாக பெண்கள் மோடிஜியின் நல்லாட்சி குறித்து பெருமைப்பட்டார்கள். பேசி மகிழ்ந்தார்கள்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன்? இந்த தடுமாற்றம். பாரதப் பிரதமரின் மக்கள் சேவையை அனைவரையும் தன் குழந்தைகளாகப் பேணுவதையும் மக்கள் மத்தியில் சொல்லவிடாமல் தடுப்பது யாரோ? ஏன் இந்த பிரிவினை வாதம்? உண்மையை மக்கள் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை”
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.