ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் நிதி வரவு மற்றும் செலவை பார்க்கலாம்.
மாநிலத்தின் வருவாய் ஒரு ரூபாய் எனக் கொண்டால் அதில்,மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 40 காசுகளும்,மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாயில் 4 காசுகளும் கிடைக்கின்றன.
கடன்பத்திரங்கள் உள்ளிட்ட பொதுக்கடன் மூலம் 34 காசுகள் கிடைக்கிறது. கடனைத் திரும்பப் பெறுவதால் 2 காசுகள் கிடைக்கின்றன. மத்திய அரசின் மானியம் 11 காசுகளும், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக 9 காசுகளும் கிடைக்கிறது.