சென்னை :
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் இன்று தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தொடரை 24-ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருகிற திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா- பட்ஜெட்டில் அறிவிப்பு