இன்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மாநில நிதி நிலை அறிக்கையில் சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாத வருங்காலத்தை உருவாக்க அதிக காலம் ஏற்படும் என்ற சூழலில் வருகின்ற பேரிடர்களை சமாளிக்க தங்களை ”தயார் நிலையில்” வைப்பதிருப்பது இன்றைய தேவை என்று காலநிலை மாற்றம் தொடர்பாக தொடர்ந்து பேசும் இயற்கை ஆர்வலர்கள் கூறுவருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூர் போன்ற பகுதிகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், தயார் நிலையில் தங்களை வைத்திருக்கவும் போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரிடர் நகரம் சென்னை: எச்சரிக்கும் IPCC அறிக்கை
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடலை ஒட்டி அமைந்திருக்கும் நாடுகள் மோசமான விளைவை சந்திக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தின் பல்வேறு விளைவுகளில் முக்கியமான ஒன்று அதிகரித்து வரும் மோசமான காலநிலை நிகழ்வுகள்.
மழைப்பொழிவு அதிகரிக்கும், புயல் நிகழ்வுகள் தொடர்கதையாகும், அதே போன்று வெள்ளமும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பீடும் கூடிக் கொண்டே இருக்கும் என்றும் தங்களின் அச்சத்தை தெரிவித்து வருகின்றனர் அவர்கள்.
கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற பசுமையக வாயுக்களின் வெளியீடு குறைக்கப்பட்டு, கார்பன் சமநிலை அடைந்து, பனிப்பாறைகள் உருகுவதை தடுத்தால் மட்டுமே கடல் நீர் மட்டம் உயர்வது குறைக்கப்படும் என்றும், கரையோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
Tamil News Live: இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
கொள்கை ரீதியாக மாற்றங்களை கொண்டு வந்து, இந்த இலக்கை நோக்கி செல்லவில்லை என்றால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்கிறது ஐ.பி.சி.சி அறிக்கை. காலநிலை மாற்றத்தின் போக்கை கருத்தில் கொண்டு தமிழக பரப்பில் 33% காடுகள் உருவாக்கப்படும் என்றும், காட்டின் பரப்பு உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.