சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ.32,599 கோடியில் இருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சரியான நடவடிக்கை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.