2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, நகைகடன், பயிர்கடன், சுயஉதவி குழு கடன் தள்ளுபடிக்காக ரூ.4131 கோடி ஒதுக்கீடு, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
தமிழக பட்ஜெட்டின் அறிவுப்புக்கு பலரும் வரவேற்பும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தும் திராவிட பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மீண்டும் ‘தமிழ்நாடு நம்பர் 1’ என்ற நிலையை நோக்கி விரைவாக நடைபோடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000- பட்ஜெட்டில் அறிவிப்பு