திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் 21-ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட் 22-ம் தேதியும், ஜூன் மாத டிக்கெட் மார்ச் 23-ம் தேதியும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் திங்கள் முதல் புதன் வரை ஒரு நாளைக்கு 30,000 டிக்கெட்டுகளும் வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இதேபோல் திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் , பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் , ரயில் நிலையம் பின்புறம் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்களில் நேரடியாக திருப்பதி வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.