துபாய் நாட்டில் ஆர்யா- சாயிஷா!
கஜினிகாந்த் படத்தில் நடித்து காதல் ஜோடியான ஆர்யா- சாயிஷா நட்சத்திர தம்பதிக்கு கடந்த ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து மீண்டும் உடற்பயிற்சி மூலம் ஸ்லிம் ஆகிவிட்டார் சாயிஷா. இந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமண நாளில் ஆர்யாவுடன் ஜாலியாக போட்டில் பயணித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த சாயிஷா, தற்போது ஆர்யாவுடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட அழகிய ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவர்களது அந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.