தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா அளித்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, அவர் மீது குற்ற வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி குர்சீதுரகுமான் என்பவர் புகார் மனு அளித்தார்.
இந்தப் புகாரை அலிகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் கட்சியின் கொள்கையைக் காட்டுவதாகவும், அதை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டனைக்குள்ளாக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.